பண்ருட்டி :
பண்ருட்டி நகராட்சி கமிஷனர் தலைமையிலான குழுவினர் நேற்று மளிகைக் கடைகளில் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பாலிதீன் பைகளை கைப்பற்றினர்.பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள ஐந்து மளிகை கடைகளில் நகராட்சி கமிஷனர் உமா மகேஸ்வரி தலைமையில் சுகாதார அதிகாரி பாலசந்திரன், ஆய்வாளர் சுதாகரன் உள்ளிட்ட அலுவலர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் காலாவதியான மசாலா பொடிகள், உற்பத்தி தேதியில்லாத பொருட் கள், காலாவதியான பாக்கெட்கள், அரசு அனுமதியில்லாத 20 மைக்ரான் குறைவான பாலிதீன் பைகள் 10 கிலோ ஆகியவற்றை நகராட்சி ஊழியர்கள் கைப்பற்றினர். தகவலறிந்த நகராட்சி சேர்மன் பச்சையப்பன், வியாபாரிகள் மோகனகிருஷ்ணன், தணிகாசலம் உள்ளிட்டோர் கமிஷனர் உமாமகேஸ்வரியிடம் "முறைப்படி பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கேரி பேக்குகள் விற்கக்கூடாது என அறிவிப்பு வெளியிட்ட பின் வியாபாரிகள் விற்றால் நடவடிக்கை எடுங்கள்' என கேட்டுக் கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக