கடலூர், டிச. 17:
கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை 7-வது நாளாக மழை பெய்தது, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 87 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
வி யாழக்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
பரங்கிப்பேட்டை 87. தொழுதூர் 68. வேப்பூர் 54. கொத்தவாச்சேரி 48. காட்டுமயிலூர் 47. மேமாத்தூர் 45. புவனகிரி 40, கடலூர், சிதம்பரம் தலா 39. லால்பேட்டை 38. சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் தலா 35. லக்கூர் 33. பெலாந்துரை 32. கீழ்ச்செறுவாய் 30. வானமாதேவி, விருத்தாசலம், அணணாமலை நகர் தலா 23. குப்பநத்தம் 22. காட்டுமன்னார்கோயில் 10.
ஏரிகளில் நீர் மட்டம் வியாழக்கிழமை நிலவரம் (மொத்த உயரம் அடைப்புக் குறிக்குள்):÷வீராணம் ஏரி 46.90 அடி (47.5 அடி). நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி. நீர் வெளியேற்றம் விநாடிக்கு 6,817 கன அடி. பெருமாள் ஏரி 6.5 அடி (6.5 அடி), நீர் வெளியேற்றம் விநாடிக்கு 2,833 கன அடி. வாலாஜா ஏரி 4.2 அடி (5.5 அடி), வெளியேற்றம் வினாடிக்கு 1,520 கன அடி. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு 5.5 அடி (7.5 அடி), நீர் வெளியேற்றம வினாடிக்கு 20,909 கன அடி. வெலிங்டன் ஏரி 8.5 அடி (27.7 அடி). நீர் வெளியேற்றம் வினாடிக்கு 302 கன அடி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக