பண்ருட்டி, டிச.17:
பண்ருட்டி பஸ் நிலையத்தின் கட்டண கழிப்பறை கழிவுநீர் பொது சாக்கடை கால்வாயில் கலப்பதைத் தடுத்து நிறுத்துவது, வார்டுகளில் உள்ள தொட்டிகளை சுத்தப்படுத்தி மூடி அமைக்க வேண்டுவது, குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும், நகராட்சியின் மெத்தன போக்கை கண்டித்தும், செயல்படாத நகராட்சியை செயல்படுத்த கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நகர நிர்வாகத்துக்கு குளுக்கோஸ் ஏற்றும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகரத் தலைவர் இ.முகமதுநாசர், பொருளர் ஜி.தினேஷ் முன்னிலை வகித்தனர்.மா வட்டத் தலைவர் என்.எஸ்அசோகன், செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் மாவட்டக் குழு ஆர்.தனம், நகரத் துணைச் செயலர் ஆர்.ராஜேந்திரன், துணைத் தலைவர் எஸ்.தணிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக