விருத்தாசலம், டிச. 17:
விருத்தாசலம் அருகேயுள்ள முதனை கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அனைத்துக் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வி ருத்தாசலம் வட்டம் முதனை கிராமத்தில் வாரச் சந்தை அமைப்பதற்கு இடையூறாக இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரியும் ஆக்கிரமிப்புக்கு துணை நிற்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பிரமுகர் செம்புலிங்கம் தலைமை வகித்தார். மதிமுக ஒன்றிய அவைத் தலைவர் சிவப்பிரகாசம், தி.க ஒன்றியச் செயலர் பாஸ்கர், பா.ஜ.க. பிரமுகர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தாமோதரன், அதிமுக பிரமுகர் உத்தண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. ஒன்றியத் தலைவர் கொளஞ்சி, பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி,தி.க. மாநிலப் பேச்சாளர் கதிரவன்,பா.ம.க. மாவட்டசெயலாளர் செல்வராசு, பா.ம.க. திருஞானம், நகர் மன்ற தலைவர் முருகன் ஆகியோர் பேசினர். நேரு இளையோர் மைய நற்பணி மன்றச் செயலர் தர்மேந்திரன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக