சிதம்பரம், டிச.17:
சிதம்பரம் நடராஜர் கோயில் செயல் அலுவலர் அலுவலகம் ரூ.7.50 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கையகப்படுத்தியது. பின்னர் கோயில் வளாகத்தில் கிழக்கு கோபுரம் அருகே உள்ள கட்டடத்தில் செயல் அலுவலர் அலுவலகம் திறக்கப்பட்டது.அந்த கட்டடம் மழையில் நீர் கசிவதால் ரூ.7.50 லட்சம் செலவில் சீரமைக்க இந்து அறநிலையத் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு வியாழக்கிழமை அதற்கான பணி தொடங்கப்பட்டது.
கட்டடத்தின் மேல்தளத்தை சீரமைத்து உள்ளே டைல்ஸ் கற்கள் பதிக்கவும், ஜன்னல் கதவுகள் மாற்றவும், முன்புறம் உள்ள தகரக்கூரை அகற்றப்பட்டு அதில் சிமென்ட் தளத்தால் கூரை அமைக்கப்படவுள்ளது என அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக