உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

கடலூர் ஒன்றிய அலுவலக கட்டடம் இடிந்து விழுந்தது


கடலூர் :

                     கடலூரில் தொடர்ந்து பெய்து வந்த கன மழையின் காரணமாக 150 ஆண்டுகள் பழமையான கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.கடலூர் நெல்லிக்குப்பம் ரோட்டில் உள்ளது கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டடம் 150 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டடத்தில் தரைத்தளமும், முதல் தளமும் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்ததால் மழைக்காலத்தில் கசிவு ஏற்பட்டது. இருந்தும் இதே இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக அலுவலகமும், கீழ் தளத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்ட அரங்கமும் இயங்கி வந்தது. கடந்த ஒரு வாரமாக கடலூரில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக கட்டடம் அதிக அளவில் ஒழுகியது. நேற்று இரவு 9 மணிக்கு திடீரென கட்டத்தின் மேற்கு பகுதி இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.

                    இரவு வாட்ச் மேன் அமாவாசைடீ குடிக்க அருகில் இருந்த கடைக்கு சென்றதால் உயிர் தப்பினார். மேலும் பகல் நேரத்தில் இடிந்திருந்தால் ஏராளமான உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். இரவு நேரம் என்பதால் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. தகவல் அறிந்த கலெக்டர் சீத்தாராமன், சம்பவ இடத்தை பார்வையிட்டு தகவல் தெரிவிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் கவுதமன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் ஆகியோர் இடிந்த கட்டடத்தை பார்வையிட்டு, அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பத்திரமாக மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior