திட்டக்குடி :
திட்டக்குடி அருகே தொடர் மழையினால் வையங்குடி ஏரி உடைப் பெடுத்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்ச் செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் 8.5 அடி வரை மழைநீர் தேங்கியது.
நேற்று முன்தினம் 289 கன அடியும், நேற்று 302 கன அடி வீதமும் பாசன வாய்க் காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் திட்டக்குடி அடுத்த வையங்குடி கிராம ஏரி உடைப்பெடுத்து விளைநிலங்கள் உட்பட பழைய காலனி, புதுக்காலனி பகுதிகளிலுள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதில் பாலகிருஷ்ணன், காசிமணி, நள்ளான், மூக் கன், சங்கர் ஆகியோரது வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த வெலிங்டன் பாசன சங்க தலைவர் மருதாச்சலம், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் செல்வக்குமார், வெலிங்டன் பாசன ஆய்வாளர் கலியமூர்த்தி ஆகியோர் கிராமத்தில் முகாமிட்டு மணல் மூட் டைகள் அடுக்கி தண்ணீர் செல்லாதவாறு தடுத்து நிறுத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக