உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

விடுதலைச் சிறுத்தைகள் சாகும்வரை உண்ணாவிரதம்

நெய்வேலி: 

                   என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் வழங்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி கம்மாபுரம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மந்தாரகுப்பம் பஸ் நிலையம் அருகே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் ஒன்றிய அமைப்பாளர் தமிழினியன் தலைமை வகித்தார். நெய்வேலி நகர அமைப்பாளர் முருகன் வரவேற்றார்.

                     மாவட்டச் செயலர் திருமாறன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். என்எல்சி எஸ்.சி.,எஸ்.டி. நலச் சங்கத் தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தவர்களை வாழ்த்திப் பேசினர்.என்எல்சி நிறுவன விரிவாக்கப் பணிகளுக்காக வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 15 கிராமங்களில் வசித்த மக்களுக்கு வீட்டில் ஒருவருக்கு வேலையும்,நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி என்எல்சி 2-ம் சுரங்கம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

                      இந்நிலையில் திடீரென முற்றுகைப் போராட்டத்தை ரத்து செய்துவிட்டு, மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அருகே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காத போதிலும் அவர்கள் அங்கேயே உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். இதையடுத்து விருத்தாசலம் வட்டாட்சியர் பூபதி, டிஎஸ்பி சிராஜூதின், நெய்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் சேகர் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.÷இதையடுத்து என்எல்சி எஸ்சி,எஸ்டி தலைவர் அன்பழகன் தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 5 பேர் என்எல்சி நில எடுப்புத்துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior