உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

முட்டம் உயர்மட்ட பாலம் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

கடலூர் : 

                முட்டம்-மணல்மேடு கிராமங்களை இணைக்கும் உயர்மட்ட பாலத்திற்கு துணை முதல்வர் ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார். கடலூர் மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) நடக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு துணை முதல்வர் ஸ்டாலின் இன்று  (5ம் தேதி) மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு நெய்வேலி  என்.எல்.சி., விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.நாளை (6ம் தேதி) காலை 9.30 மணிக்கு குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

                       பின் காலை 11 மணிக்கு காட்டுமன்னார்கோவில் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே முட்டம்-மணல் மேடு கிராமங்களை இணைக்கும் உயர் மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டி, பிச்சாவரம்-கொடியம்பாளையம் சாலையில் உப்பனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் முன்னிலை வகிக்கிறார்.  கலெக்டர் சீத்தாராமன் வரவேற்கிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior