உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

பல்கலை மாணவர்கள் இறந்த சம்பவம்: அரசு நியமித்த அதிகாரி இன்று விசாரணை


சிதம்பரம் : 

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த அதிகாரி இன்று (5ம் தேதி) விசாரணையை துவக்குகிறார்.

                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் இன்ஜினியரிங் படித்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் கவுதம்குமார் 28ம் தேதி விபத்தில் இறந்தார். அவருக்கு பல்கலை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என  வெளி மாநில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்ததில் வாய்க்காலில் குதித்து சுமித்குமார்,  முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் ஆகிய மூன்று மாணவர்கள் இறந்தனர். அ.தி.மு.க., மா.கம்யூ., கட்சிகள் நீதி விசாரணை கேட்டன. இந்நிலையில் சென்னை வடக்கு மண்டல புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., நாராயணசாமி சிதம்பரம் வந்தார். நேற்று முன்தினம் விசாரணையை துவக்கிய அவர், எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ், டி.எஸ்.பி., மூவேந்தன் மற்றும் சம்பவத்தின் போது இருந்ததாக கூறப்பட்ட போலீசாரிடம் விசாரித்தார். பின்னர் மாணவர்களால் சேதப்படுத்தப்பட்ட கட்டடங்கள், மருத்துவமனை இடங்களுக்கு சென்று  பார்வையிட்டார்.
                               மாணவர்கள் தண்ணீரில் குதித்த பாலமான் வாய்க்கால் பகுதியை பார்வையிட்ட அவர், சிதம்பரத்தில் தங்கியிருந்த சில வெளி மாநில மாணவர்களிடம்  நேற்று முன்தினம் இரவு வரை விசாரணை நடத்தினார். தமிழக அரசு நியமித்துள்ள விசாரணை அதிகாரி டி.ஆர்.ஓ., நடராஜன்  இன்று (5ம் தேதி) விசாரணை துவக்குகிறார்.  சிதம்பரம் பல்கலையில் படிக் கும் வெளி மாநில மாணவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு கேட்டதையடுத்து, பல்கலையில் வெளி மாநிலத்தவர் எத்தனை பேர் படிக்கின்றனர். அதில் எத்தனை பேர் விடுதியில் தங்கியுள்ளனர். வெளியில் தங்கியுள்ள மாணவர்கள் விவரம், அவர்கள் தங்கியுள்ள இடங்கள் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சேகரித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். வெளிமாநில மாணவர்கள் உள்ளூர் விலாசத்தில் குடியிருப்பு சான்று பெற்று சேர்ந்திருப்பதால் அவர்களின் முழு விவரங்களை சேகரிக்க முடியாமல் திணறினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior