உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

செம்மை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு மானியத்தில் கோனோவீடர் கருவி


பண்ருட்டி : 

                   விவசாயிகளுக்கு மானி யத்தில் ஜிப்சம், களையெடுக்கும் கருவிகள் விற் பனை செய்யப்பட்டு வருவதாக பண்ருட்டி வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் எக்டேருக்கு மூவாயிரம் ரூபாய் மானியத்தில் களையெடுக்கும் கோனோவீடர் கருவி ஒன்றும், வரிசை நடவிற்கு உதவிடும் மார்க்கர் கருவி ஒன்றும், உரம் மற்றும் உயிரியல் காரணிகளும் வழங்கப்படுகிறது.

                 நெல், சிறுதானியங்கள், உளுந்து, மணிலா, எள் பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில்  ஜிப்சம் மற்றும் ஜிங்சல்பேட் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மூட்டைக்கு 61 ரூபாய் மானியம் வழங் கப்படுகிறது. ஜிங்க் சல்பேட் எக்டேருக்கு 25 கிலோ வீதம், கிலோ 18 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்யும் நெல், கரும்பு, மணிலா பயிர் வகைகள், தென்னை, பருத்தி முதலான பயிர்களுக்கும் கந்தக சத்து தேவை அதிகம் உள் ளது. ஆனால் மண்ணில் தவையான கந்தகசத்து இல்லாததால் மகசூல் குறைகிறது.இதனை தவிர்த்திட  ஜிப்சம் எக்டேருக்கு பயிறுவகை பயிர்களுக்கு 110 கிலோவும், மணிலா மற்றும் நெல் பயிர்க்கு 400 கிலோவும் மானியத்தில் வழங்கப்படுகிறது.
                     ஜிப்சம் மற்றும் ஜிங்சல் பேட் பயிருக்கு அடியுரமாக இடுவதால் 20 சதவீத மகசூல் அதிகரிக்கும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தெளிப்பு நீர் பாசனக்கருவிகள் அமைக்க எக்டேருக்கு 7,500 ரூபாய் மானியத்திலும், தார்பாய் மற்றும் விதை ஊன்றும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஐசோபாம் திட்டத்தில் மணிலா டி.எம்.வி.2 ரகம் மற்றும் உளுந்து டி.9 ரகம் பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கிலோவிற்கு 20 ரூபாய் மானியத்தில் விவசாயிகள் வாங்கி பயன்பெற அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி பயன் பெறலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior