உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்

கடலூர்:

                   கடலூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரசாரத்தை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 2007-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1.84 லட்சம் பேர் எச்.ஐ.வி. நோய் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் 783 நம்பிக்கை மையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 

                   எய்ட்ஸ், எளிதில் தொற்றக்கூடிய சூழலில் உள்ள மக்களிடையே, ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் பற்றியத் தகவலை வழங்கி, அந்த மையங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது. "தில்லுதுர' என்ற புதிர் பிரசாரத்தின் மூலம் மாவட்டங்கள் தோறும் தற்போதைய எய்ட்ஸ் பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.  கடலூர் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 40 கிராமங்களில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. பிரசாரத்தில் பயிற்சி பெற்ற கலைஞர்கள் பலர் பங்கேற்கிறார்கள். உரையாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் பிரசாரம் மேற்கொள்வர். திருமணத்துக்கு முன் எச்.ஐ.வி. பரிசோதனை உள்ளிட்ட ஆலோசனைகள், தகவல்கள் இந்தப் பிரசாரத்தின் போது மக்களுக்கு வழங்கப்படும். எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்தப் பிரசாரத்தை மேற்கொள்கிறது. கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார், கடலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior