உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

மாணவர்களை கல்வியில் மேம்படுத்திட வேண்டும்: தொடக்க கல்வி துறை இயக்குனர் தேவராஜன் பேச்சு

ராமநத்தம் : 

                   தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் குடும்பமாக இருந்து மாணவர்களை கல்வியில் மேம்படுத் திட சுயநலவாதிகளாக செயல்பட வேண்டும் என தொடக்க கல்வி துறை இயக்குனர் தேவராஜன் கலந்தாய்வு மேற்கொண்டார். ராமநத்தம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல் படும் 107 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள அடிப் படை வசதிகள், மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறைகளை தொடக்கக்கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழுவினர் தலா 11 பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.  இதன் அறிக்கைகளை மாலையில் ராமநத்தத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் சமர்பித்தனர். கூட்டத்திற்கு அனைவருக்கும் கல்வி இயக்க சி.இ.ஓ., கதிர் வேல், கூடுதல் திட்ட அலுவலர் செல்வம், மாவட்ட அலுவலர் விஜயா முன்னிலை வகித்தனர். மங்களூர் வட்டார மேற்பார்வையாளர் முருகேசன் வரவேற்றார்.
         
கூட்டத்தில் தொடக்கக்கல்வி துறை இயக்குனர் தேவராஜன் பேசியதாவது: 

                மங்களூர் வட்டாரத்தில் மேற் கொண்ட ஆய்வில் 80 சதவீத பள்ளிகள் சுற்று சூழல், கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி பெற்றுள்ளது. அதேபோல் மாணவ, மாணவிகள் செயல் வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறையிலும் 75 சதவீதம் வாசிப்பு திறன் கொண்டுள்ளனர். தொடக்க கல்வி முடித்து உயர் நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி தமிழ், ஆங்கிலம் பாடங் களில் கூடுதலாக வகுப்புகள் நடத்திட வேண்டும். தற்போது பல மெட்ரிக்., பள்ளிகள் வந்து விட்டது. அவற்றிற்கு இணையாக அரசு பள்ளிகளிலும் தனிக்கவனம் செலுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதோடு, ஆசிரியர்களும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைத்திட வேண்டும்.
                        பள்ளிகளில் 70 மாணவர்கள் இருந்தால் 3 வது ஆசிரியரை நியமிக்க அரசு பரிசீலித்து வருகிறது.  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் குடும்பமாக இருந்து மாணவர்களை கல்வியில் மேம்படுத் திட சுயநலவாதிகளாக செயல்பட வேண்டும்.  மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு கடந்த ஆண்டு 850 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால் ஆயிரத்து 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  எனவே, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வரும் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்திட வேண்டும். முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து நிதி பெற்று பள்ளிக்கு தேவையான கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம மக்களும் தங்களது கிராம பள்ளிகளை தங்களுக்குள் ஒன்றாக கருதி பராமரிப்பர் என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior