கடலூர் :
கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்கள் விசைப் படகுகளை பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் அடைகின்றன. அந்த நேரத்தில் வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன் வளம் குறைந்து வருகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டும் கடலில் மீன் வளத்தை மேம்படுத்தும் பொருட்டும் கோடை காலங்களில் 45 நாட்கள் மீன் பிடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனையடுத்து விசைப்படகில் சென்று சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிக்க கடந்த 15ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி மீனவர்கள் தங்கள் விசைப் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த தருணத்தை மீனவர்கள் பயன்படுத்திக் கொண்டு படகில் மராமத்து பணிகளை பார்க்கவும், இன்ஜினில் உள்ள பழுது நீக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.