உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு: தமிழகம் 98.98 சதவீத தேர்ச்சி


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் வெள்ளிக்கிழமை, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவை ஆவலுடன் பார்க்கும் மா
சென்னை:

              சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தமிழகத்தில் தேர்வு எழுதிய 17,423 மாணவ, மாணவியரில் 17,245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.98 சதவீத தேர்ச்சியாகும். சென்னை மண்டலத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 96.18 சதவீதம்.நாடு முழுவதும் உள்ள 8 மண்டலங்களுக்கான முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு புதியதாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகள், ஆந்திரம், டையு மற்றும் டாமன், கோவா, கர்நாடகம், கேரளம், லட்சத்தீவுகள், மகாராஷ்டிரம், புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகியவை சென்னை மண்டலத்தில் உள்ளன. 

சென்னை மண்டலம்: 

               சென்னை மண்டலத்தில் மொத்தம் 1,16,927 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,12,465 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 96.18 சதவீதம்.  

தமிழகம்: 

                  தமிழகத்தில் உள்ள 193 பள்ளிகளைச் சேர்ந்த 17,452 பேர் பதிவு செய்திருந்தனர். தேர்வு எழுதிய 17,423 பேரில், 17,245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 178 பேர் தகுதி பெறவில்லை. இது 98.98 சதவீத தேர்ச்சி.ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 17,320 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 17,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.55 சதவீத தேர்ச்சி.கர்நாடகத்தைச் சேர்ந்த 14,288 பேர் தேர்வு எழுதியிருந்தனர். 14,166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.15 தேர்ச்சி சதவீதம்.கேரளத்த்தில் 41,594 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 41,253 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.18.மகராஷ்டிரத்த்தில் 18,523 பேர் தேர்வு எழுதினர். இதில் 18,135 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.91.புதுச்சேரியில் இருந்து 402 பேர் தேர்வு எழுதினர். இதில் 400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.50.உடனடித் தேர்வு: தேர்வில் தகுதியடையாதவர்களுக்கு ஜூலை 16-ம் தேதி சிறப்பு உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கு 5 வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 2 அல்லது 3-வது வாரத்தில் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து அவர்கள் பிளஸ் 1 படிக்கத் தகுதி பெறுவர் என்றார் சென்னை மண்டல இணை செயலாளர் நாகராஜு.இதில் டி முதல் ஏ1 வரை கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், பிளஸ் 1 படிக்கத் தகுதியுடையவர்கள். மேலும் இ1, இ2 கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், பிளஸ் 1 படிக்கத் தகுதி பெறாதவர்கள். இவர்களுக்கு 5 வாய்ப்பு தரப்பட்டு, உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது.இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், நடப்புக் கல்வியாண்டில் பிளஸ் 1 சேர முடியாது என்று தெரிகிறது. மாணவரை பிளஸ் 1 சேர்க்கும் விவகாரத்தில் பள்ளி தான் இறுதி முடிவெடுக்கும் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 சேர விதிமுறைகள் வெளியீடு:

                 சிபிஎஸ்இ-யில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர், பிளஸ் 1-ல் தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்க விரும்பும், மாணவர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ளார்.அதன்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் டி முதல் ஏ1 வரை கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் சேர்க்கப்படலாம்.மேலும் இ1, இ2 கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெறாதவர்கள் என்று தெரிவித்துள்ளது.

மதிப்பெண் கிரேடு கிரேடு பாயின்ட்

91-100             ஏ1               10
81-90              ஏ2                9
71-80              பி1                8
61-70              பி2               7
51-60              சி1               64
1-50               சி2               5
33-40              டி                4
21-32             இ1                 ---
20-க்கும்     குறைவு   இ2     ---

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior