இந்தியன் வங்கிக் கிளைகளில் நடப்பு ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இந்த வங்கியின் முதன்மை நிர்வாக இயக்குநர் டி.எம்.பாசின் கூறினார். இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் 1,759 கிளைகள் உள்ளன. தென்மாநிலங்களில் மட்டும் 1,186 கிளைகள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது 757 கிளைகள் உள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 28 கிளைகள் திறக்கப்படும். தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் ரூ.58 ஆயிரத்து 669 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.78 ஆயிரத்து 834 கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் நாடு முழுவதும் ரூ.2 ஆயிரத்து 300 கோடிக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க தனியாக இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அதில் புகார் செய்தால் வாடிக்கையாளர்களின் குறைகள் உடனடியாகக் களையப்படும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக