உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

கடலூர் மாவட்டத்தில் 28,097 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் : 

                  கடலூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 97 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். கடலூர் வன்னியர்பாளையம் தனபாக்கியம் நகரில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான "தயா' பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. கடலூர் கல்வி கழக தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்திரா சீனிவாசன் குத்துவிளக்கேற்றி வைத்தார். உதவி தலைவர் அருணாசலம் வரவேற்றார்.


 பள்ளி மாணவர்களின் வகுப்பறையை திறந்து வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசியதாவது:

                     இறைவன் அனைவரையும் ஏதோ ஒரு குறையுடன் தான் படைத்திருக்கிறான். இது இறைவன் நமக்கு வைத்த பரிசோதனை. நாம் பலவீனத்தை ஒதுக்கி பலத்தை கூட்டிக்கொள்ள வேண்டும். இது போன்ற மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிகள் இனி வராமல் இருக்க வேண்டும். இப்பள்ளிக்கு வரும் சாலையை சீரமைக்க கலெக்டர் நிதி மூலம் 3 லட்ச ரூபாய் வழங்கப்படும். மேலும் காட்டுமன் னார்கோவிலில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அதிகமுள்ள ஐந்து மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் 28 ஆயிரத்து 97 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. ஆயிரத்து 500 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

                   மாவட்டத்தில் 4 ஆயிரத்து 408 மனவளர்ச்சி குன்றியவர்கள் உள்ளனர். 2009-10ம் ஆண்டு 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 671 ரூபாயில் 3 ஆயிரத்து 558 பேருக்கு உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய வாகனத்திற்கான சாவியை வள்ளி விலாஸ் பாலு வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அலுவலர் சீனுவாசன், ஆடிட்டர் அனந்தராமன், வெங்கடேசன், செயலாளர் கணபதி, வள்ளிவிலாஸ் பாலு, மஹாவீர் மல்மேத்தா, அரிமா திருமலை, கொண்டல்வாணன் உட் பட பலர் பங்கேற்றனர். சீனுவாசன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior