உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

கோவில் உண்டியல் வைப்பதில் மோதல் விருத்தாசலம் அருகே 30 பேர் படுகாயம்

விருத்தாசலம் :

                    கோவில் உண்டியல் வைப்பதில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திருப்பயர் காலனியைச் சேர்ந்தவர்கள் சேவியப்பர் என்ற இந்து கடவுள் கோவிலை கட்டி கடந்த சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தினர். கோவில் ரோட்டிற்கு உள்ளே தள்ளி அமைந்திருந்ததால் அந்த கோவிலுக்கு அருகே ஒரு உண்டியலும், சாலை ஓரத்தில் ஒரு உண்டியலும் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று சாலை ஓரத்தில் உண்டியல் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதனையறிந்த ஊர் தரப்பினர் சாலை ஓரத்தில் துஷ்ட தேவதை சிலை இருப்பதால் அதன் அருகே உண்டியல் வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காலனி மற்றும் ஊர்பகுதி மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

                         தகவல் அறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., ராஜசேகரன் மற்றும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர். இச்சம் வத்தில் போலீஸ்காரர் விக்னேஷ்வரன் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் இரு தரப்பையும் சேர்ந்த 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த செல்வராசு (60), சேகர் (40), பாலமுருகன், செல்லப் பாங்கி (30), அலமேலு (17) உட்பட 30 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாசில்தார் ஜெயராமன் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி உண்டியல் வைப்பது குறித்து முடிவு செய்யலாம் என அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து இப்பிரச்னைக்கு தற்காலிக முடிவு ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. எனவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior