உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

சிதம்பரத்தில் தரைமட்டமாக்கப்பட்ட சுப்ரமணியர் சன்னதி கருவறை பூட்டியே கிடப்பது மக்களுக்கு ஆகாது: கடலூர் கலெக்டரிடம் புகார்

சிதம்பரம் : 

                சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண் டுகளை கடந்த பழமையான சுப்ரமணியர் சன்னதி கும்பாபிஷேகம் செய்யப் போவதாக கூறி தரைமட்டமாக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் கட்டப்படவில்லை. பூஜைகூட நடத்தாமல் கருவறை பூட்டியே கிடப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் ஆகாது என தீட்சிதர் கடலூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளதால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

                 சிதம்பரம் நடராஜர் கோவில் வடக்கு ராஜகோபுரம் அருகே சிவகங்கை குளக்கரையில் பாண்டியநாயகம் என்றழைக்கப்படும் சுப்ரமணியர் கோவில் உள்ளது. கி.பி. 1216-1251 ஆண்டுகளில் மாறவர்ம சுந்தரபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. அழகான தேர் போன்று அமைந்த கோவிலில் வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து சுப்ரமணியர் மூலவராக காட்சியளிப்பார்.இக்கோவிலின் முகப்பில் தேர் உருளைகள், யானைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மண்டப உட்புற மேல் விமானத்தில் கந்தபுராண சித்திரங்கள், திருமுறை ஆசிரியரின் உருவங்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்கள், ஓவியங்கள் பழங்கால கட்டட திறமைகளை வெளிப் படுத்தும் விதமாக அமைக் கப்பட்டிருக்கும்.

                       இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வந்தது. அத்துடன் சிதம்பரம் நகரை சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு தான் திருமணம் நடக்கும். இத் தனை சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் சிதலமைந்து விட்டதாகவும், புதியதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என காரணம் கூறி மூன்று ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்கள் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். கோவில் கருவறை மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும் திறந்து பூஜை செய்யாமல் அந்த இடம் முட்புதர்களாக மாறிவிட்டது.இடிக்கப்பட்ட கோவிலை தீட்சிதர்கள் தரப்பில் கட்ட முயற்சி மேற்கொள்ளாத நிலையில், கடந்த ஆண்டு நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட் டிற்கு கொண்டுவரப்பட்ட பிறகு கோவில் இடிக்கப் பட்டது குறித்து முழு தகவலையும் அறநிலையத்துறைக்கு தெரியப்படுத்தினர்.

                        இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில் அறநிலையத்துறை ஏற்றது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. வழக்கு முடியும் வரை கோவிலில் எந்தவித கட்டமைப்பு பணியோ, பழமை கட்டடங்கள் இடிக்கவோ கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அப்படி அவசியம் ஏற்பட்டால் கோர்ட் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                   கோவில் கட்டப்படாததற்கு பல காரணங்களை கூறி வந்த தீட்சிதர்கள் தரப்பு தற்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவை காரணமாக கூறி வருகிறது. பழமையான கோவிலை காலம் கடத்தாது கோர்ட் அனுமதி பெற்றாவது கட்டி முடிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர் பார்ப்பு. கோவில் கட்டப்படாதது குறித்து கலெக்டர் வரை கைலாச சங்கர தீட்சிதர் என்பவர் புகார் செய்திருப்பதால் வெளியில் தெரியாமல் இருந்து வந்த இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

கலெக்டரிடம் கைலாச சங்கர தீட்சிதர் கொடுத்துள்ள புகாரில், 

                     மூன்றாண்டுகள் கோவில் இடிக்கப் பட்டு பூஜை ஏதும் செய்யாமல் இருப்பது நாட்டிற்கும், மக்களுக்கும் ஆபத்து. கோவில் இடிக்கப்பட்ட பிறகு தான் நடராஜர் கோவிலிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior