உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

முறையான சிகிச்சை இல்லாததால் மாடு இறந்தது கடலூர் மருத்துவமனையில் விவசாயிகள் ஆவேசம்

கடலூர் : 

                  கடலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்த மாடு இறந்ததால் ஊழியர்களிடம் விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன். இவர் நடக்க முடியாத தனது கறவை மாட்டை கடந்த 26ம் தேதி புதுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். நேற்று மாலை மாடு திடீரென இறந்தது. அதே போன்று தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரன், கன்று போட முடியாமல் அவதியடைந்த மாட்டை மருத்துவமனைக்கு ஓட்டி வந்தார்.

                  முறையான சிகிச்சையில்லாததால் கன்றுகுட்டி வயிற்றிலேயே இறந்தது. மாட்டின் வயிற்றில் கம்பியை போட்டு இழுத்ததால் மாடும் உயிருக்கு போராடும் நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமல் சென்று விட்டனர். மாடு இறந்த தகவல் அறிந்த பாஸ்கரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி விவசாயி பாஸ்கரன் கூறுகையில் "எனது மாட்டை சிகிச்சைக்காக சேர்த்த போது எந்தவித சோடையின்றி 2 பக்கெட் தண்ணீர் குடித்தது.

                     நான் சாப்பிட சென்ற ஒரு மணி நேரத்தில் மாடு இறந்துவிட்டது என தகவல் கிடைத்தது. மாடு இறப்பதற்கு முன் மருத்துவமனையில் இறைச்சி கடைக் காரர்கள் காத்திருக்கின்றனர். எங்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன் இறைச்சி கடைக் காரர்களுக்கு மருத்துமனையிலிருந்து தகவல் செல்கின்றது. அறுப்பவர்களுக்கு மாட்டை கொடுப்பதற்காக ஆபத்தான நிலையில் இருக்கும் மாடுகளுக்கும் சிகிச்சை அளிப்பதில்லை. இந்த மருத்துமனையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது' என புகார் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior