உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

கடலூரில் தொடரும் கடல் அரிப்பு: மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டு வருவதில் சிக்கல்


கடலூர் தேவனாம்பட்டினத்தில் படகுகளை நிறுத்த முடியாத அளவுக்கு, தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு.
 
கடலூர்:

                கடலூரில் தொடர்ந்து கடல் அரிப்பு நீடிப்பதால், கடலுக்குள் செல்லும் படகுகளை மீனவர்கள் மீண்டும் கரைக்குக் கொண்டு வருதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. லைலா புயல் வீசியதைத் தொடர்ந்து கடலூரில் கடல் அரிப்பு அதிகரித்து உள்ளது. கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளிட்ட சில பகுதிகளில் 50 முதல் 100 மீட்டர் தூரத்துக்கு மேல், கடல் வெளிவந்து உள்ளது. தேவனாம்பட்டினத்தில் கடல் அரிப்பைத் தடுக்க கருங்கல் கரை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊருக்குள் கடல் நீர் வருவது தடுக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்தப் பகுதிகளில் படகுகளைக் கரைக்குக் கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

                  கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. இவை மீனவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். கடல் அரிப்பு நீடித்து வருவதால், கடற்கரை ஓரங்கள் 10 அடி ஆழம் வரை பள்ளமாக உள்ளன. படகுகள் நிறுத்தும் மணல் பரப்பு முழுவதும் அரித்துச் செல்லப்பட்டு இருக்கிறது.  இதனால் படகுகளை கரையில் கொண்டு வந்து நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவிக்கிறார்கள். இதன் காரணமாக கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், தங்கள் படகுகளை கடலூர் துறைமுகம் வரை 8 கி.மீ. தூரம் ஓட்டிச் சென்று உப்பனாற்றின் வழியாக உப்பங்கழிகளில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். துறைமுகத்தின் நோஸ் பாயின்ட் வழியாக சிறிய படகுகள், உப்பனாற்றுக்குள் நுழைந்து வருவதில் சிரமங்கள் இருப்பதாக மீனவர்கள் கூறுகிறார்கள். 

இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் வெள்ளிக்கிழமை கூறுகையில், 

                   தற்போது ஏற்பட்டு இருக்கும் கடல் அரிப்பால் கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களை கரைக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. படகுகளைப் பாதுகாப்புடன் நிறுத்த, தேவனாம்பட்டினம், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் ஒவ்வொரு நாளும் 8 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணித்து, உப்பனாற்றுக்குள் வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior