உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

மீன் பிடி தடை காலம் முடிந்தது மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்

கடலூர் : 

                  மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடை காலம் முடிவடைந்ததால், நேற்று நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீன் உற்பத்தியைப் பெருக்க கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை 45 நாட்களுக்கு, கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்தது. ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. சிறு படகுகள் மற்றும் கட்டு மரம் வைத்திருப்பவர்கள் மட்டும் கரையோரப் பகுதிகளில் மீன் பிடித்து வந்து விற்பனை செய்தனர்.

                       இந்நிலையில், கடலில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதற்காக நேற்று காலையிலிருந்தே மீனவர்கள், மீன் பிடிக்கத் தேவையான வலை, ஐஸ், உணவுப் பொருட்கள் போன்றவற்றை படகில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் கடலில் நீரோட்டத்தைப் பார்த்து நேற்று நள்ளிரவு முதலே விசைப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லத் துவங்கினர். சில மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் கடலுக்குச் சென்றனர். இதனால், வெறிச்சோடி காணப்பட்ட கடலூர் மீன்பிடி துறைமுகம் மீண்டும் களை கட்டத் துவங்கியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior