உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

தமிழகத்தில் வெயிலுடன் அனல் காற்று பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்படுமா?

கடலூர் : 

                    கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் 1ம் தேதியில் பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஒரு வாரமாகவே 100 டிகிரிக்கு மேல் வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருகிறது. கடற்கரையோர மாவட்டமான கடலூரில் வெயில் அளவு 105 டிகிரியைத் தாண்டியுள்ளது. வறட்சி மாவட்டமான வேலூரில் 110 டிகிரியையும் தாண்டிவிட்டது.

                    மாநிலம் முழுவதும் வெயில் தாக் கம் 100 டிகிரியைத் தாண்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. கத்திரி முடிந்தும், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்குமென வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் துவங்கப்பட உள்ளன. வெயிலின் தாக்கம் காரணமாக, அண்டை மாநில மான புதுச்சேரியில் பள்ளிகள் திறப் பது வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக் கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை ஒத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது ஜூன் 15ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 

இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமியிடம் கேட்ட போது, 

                            "வெயில் காரணமாக, பள்ளி திறக்கும் தேதியை தள்ளி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனவே, குறிப்பிட்ட தேதியில் பள்ளிகள் திறக்கப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior