உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் அண்ணா பல்கலை. காலக் கெடு நீட்டிக்குமா?

கடலூர் : 

                     தமிழக அரசு அறிவித்துள்ள முதல் பட்டதாரிக்கான சான்று பெற கால அவகாசம் வேண்டியுள்ளதால், பொறியியல் கல் லூரி சேர்க்கைக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் நுட்பக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக் கீட்டில் சேர்வதற்கான விண்ணப்பம் அண்ணா பல்லைக் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக் கழகத்தில் வரும் 31ம் தேதி மாலை 5.30 மணிக் குள் சேர்க்க வேண்டும். இந்நிலையில் பட்டதாரிகள் எவரும் இல்லாத குடும்பத்திலிருந்து தொழில் நுட்பக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை தமிழக அரசே செலுத்தும் என அறிவித்துள்ளது. இதற்கு குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றை தாசில்தாரிடம் பெற்று விண்ணப்பத் துடன் இணைக்க வேண் டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

                    இந்த சான்று பெற மாணவரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களின் கல்விச் சான்றுகள், விண்ணப்பதாரரின் கல்விச் சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் நகலை இணைத்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தாரிடம் சான்று பெற்று விண்ணப் பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கடந்த 26ம் தேதி அன்றுதான் வழங்கப் பட்டது.

                 அதன் பிறகே மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கான சான்று பெற விண் ணப்பித்து வருகின்றனர். தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் வருவாய் தீர்வாய கணக்கு (ஜமாபந்தி) நடைபெற்று வருவதால் வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளர்களை தேடி அலைய வேண்டியுள்ளது. இவை அல்லாமல் மாநிலம் முழுவதும் வி.ஏ.ஓ.., பணியிடங்கள் பல காலியாக உள்ளதால் ஒவ்வொரு வி.ஏ.ஒ.,க்களும் கூடுதல் கிராமங்களை சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளதாலும் மாணவர்கள், முதல் பட்டதாரி சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

                    அண்ணா பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் இன்றும், நாளையும் (29 மற்றும் 30ம் தேதிகள்) அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதாலும் முதல் பட்டதாரிக்கான சான்று பெறாமல் விண்ணப்பித்து வருகின்றனர். அரசின் புதிய உத்தரவு ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சென்றடைய அண்ணா பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior