கடலூர்:
வேலை செய்தால் மட்டும் ஊதியம் என்ற அடிப்படையில், தினக்கூலி வழங்கும் சுமைத் தூக்கும் வேலைக்கான நேர்காணலுக்கு, வெள்ளிக்கிழமை கடலூரில் 1000 பேர் திரண்டனர்.
சுமைத் தூக்கும் தொழிலாளர் பணிக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கடலூர் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேர்காணல் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 6 சேமிப்புக் கிடங்குகளிலும் சுமைத் தூக்கும் தொழிலாளர்களை நியமிக்க, விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நேர்காணலில் கலந்து கொள்ள 1,000 தொழிலாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 90 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பணிக்கு மாத ஊதியம் என்ற அடிப்படை எதுவும் இல்லை. ஆனால் தொழிலாளர்கள் எவ்வளவு வேலை செய்கிறார்களோ அதற்கேற்ப தினக்கூலி வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக