உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வைகோ கண்டனம்


              என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 
              இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் நவரத்னா பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 2009-2010 ஆம் நிதியாண்டில் ரூ.1,247 கோடி லாபம் ஈட்டி, தலைசிறந்த பொதுத் துறை நிறுவனமாக என்.எல்.சி. தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது. இப்போது மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால், என்.எல்.சி.யின் 10 விழுக்காடு பங்குகளை விற்று, ரூ. 2400 கோடி நிதி திரட்டப்படும் என்று அறிவித்து உள்ளார்.மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதை மத்திய நிலக்கரித் துறை அமைச்சரின் அறிவிப்பால் அறிய முடிகிறது.  போராட்டக்களமாக மாறி உள்ள நெய்வேலி தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வராத நிலக்கரித்துறை அமைச்சர், என்.எல்.சி. பங்குகளை விற்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவதைக் கண்டு, தொழிலாளர்கள் கொந்தளித்து உள்ளார்கள்.  தொழிலாளர்கள் ஒன்று திரண்டு வேலைநிறுத்தம் மேற்கொண்டால், தமிழ்நாடே இருளில் மூழ்கிவிடும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்கிட தொடர்ந்து முயற்சித்துவரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், என்.எல்.சி. பங்குகள் விற்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior