விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை கோட்டாட்சியர் முருகேசன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நாச்சியார்பேட்டை பகுதியை ஒட்டிய கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் 30-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியுள்ளனர். இது குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்பிரமணியன் கோட்டாட்சியரிடம் முறையிட்டார்.
முறையீட்டின் பேரில் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ஜெயராமன், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன், நகர்மன்றத் தலைவர் முருகன், கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரன் ஆகியோர் சென்று ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் இது கல்லூரிக்குச் சொந்தமான பட்டா இடம். இங்கு வீடுகள் கட்டக் கூடாது என கோட்டாட்சியர் தெரிவித்தார். மேலும் கல்லூரி வளாகத்தை ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை 2 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரனிடம் கோட்டாட்சியர் தெரிவிதார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக