உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீட்பு

கடலூர் : 

                   சிதம்பரம் மற்றும் கடலூர் பஸ் நிலையங்களில் அனாதைகளாக திரிந்த மாற்றுத் திறனாளி சிறுமிகள் இருவரை போலீசார் மீட்டு இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 வயது சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் சிறுமியால் கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை என தெரியவந்தது. அவரது உடையில் அரசு காது கேளாதோர் பள்ளி, தஞ்சாவூர் என எழுதப்பட்டிருந்தது. இதே போன்று கடலூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த 6 வயது சிறுமியை புறக்காவல் நிலைய போலீசார் விசாரித்ததில் மூளை வளர்ச்சி இல்லாதவர் என தெரியவந்தது. மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் கடலூர் மற்றும் சிதம்பரம் போலீசார், கடலூரில் உள்ள இந்திய குழந்தைகள் நலச் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், ஆலோசகர் மணிகண்டன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior