உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

காணாமல் போன குழந்தைகள் குறித்த இணையதளம் தொடக்கம்

             தனி மனிதனின் உரிமையைவிட, குழந்தைகளுக்கான உரிமையை மேலானது என்றார் கரூர் மாவட்ட நீதிபதி வி. ராமமூர்த்தி. கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, சைக்கோ அறக்கட்டளை ஆகியன சார்பில் வெண்ணைய்மலையில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம், சட்டக் கல்வியறிவு முகாம் ஆகியன புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, 

காணாமல் போன குழந்தைகள் குறித்த இணையதளத்துத் தொடக்கிவைத்து, கரூர் மாவட்ட நீதிபதி வி. ராமமூர்த்தி பேசியது: 

                   நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில் உள்ளது. சமூக வேறுபாடுகளை நீக்குவதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். மிகக் குறைந்த கூலிக்கு குழந்தைகள் கிடைப்பதால் குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்கிறது. அதேநேரம், பெற்றோர் வாங்கும் கடனுக்கு வட்டி கட்டுவதற்காக குழந்தைகள் உழைக்கும் நிலையும் உள்ளது. 

                      எனவே, மக்கள் பிரச்னையை தீர்க்கவும், ஆலோசனைகள் வழங்கவும் சட்டப் பணிகள் ஆலோசனைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தனி மனித உரிமைகளை விட குழந்தைகளுக்கான உரிமைகள் மேலானவை. குழந்தைத் தொழிலாளர் என்பதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு அளவுகோல் உள்ளது. இந்தியாவில் 14 வயதுக்கு கீழானவர்களும், கென்யாவில் 15 வயதுக்குக் கீழானவர்களும் குழந்தைத் தொழிலாளர்களாகக் கணக்கிடப்படுகின்றனர்.  குழந்தைகளுக்கான படிப்பு என்பது சம்பாதிப்பதற்காக அல்ல, சுயமரியாதையோடு வாழ்வதற்காகத்தான். கரூர், சிவகாசி போன்ற தொழில்சாலைகள் நிறைந்த பகுதிகளில் இன்றளவும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள் என்றார் நீதிபதி ராமமூர்த்தி.  இந்த நிகழ்ச்சியில் சைக்கோ அறக்கட்டளை இயக்குநர் ஜெ. கிறிஸ்துராஜ், நிர்வாகி கி. பிலோராணி, தொழிலாளர் நல அலுவலர் கே. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior