சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் உற்பத்தியாகும் வண்ண மீன்கள் ஏற்றுமதி குறித்து பல்கலைக்கழகமும், கேரள கவில் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் உலக அளவில் முதல் முறையாக வண்ண மீன்கள் கழிமுக நீரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் கேரளா அக்வா வெண்டர் இன்டர்நேஷனல் லிமிடெட் (கவில்) மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்ணாமலை பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது. துணைவேந்தர் ராமநாதன், கவில் மேலாண் இயக்குனர் கோபாலகிருஷ்ண நாயர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி, இயக்குனர் பாலசுப்ரமணியன், துணை பேராசிரியர் அஜித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக