சிதம்பரம் :
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான நேற்று (18ம் தேதி) காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர் கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி மற்றும் வடக்கு வீதி வழியாக மாலை கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து இரவு லட்சார்ச்சனை நடந்தது. இன்று (19ம் தேதி) அதிகாலை மகாஅபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சியும், 12 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன மகாதரிசனமும் நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக