கடலூர் :
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பது, வரதட்சணை தடுப்பு சட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணபாண்டியன் தலைமை தாங்கினார். கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், மாநில மகளிர் ஆணையத் உறுப்பினர் சுஜாதா சீனுவாசன், ஏ.டி. எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., மகேஸ்வரன், மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் மகளிர் ஆணையத் தலைவர் சற்குணபாண்டியன் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் 23 புகார் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆணையத்தில் 2007ம் ஆண்டு முதல் இவரை 4523 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை சட்டம் 2005ன் படி இது போன்ற வழக்குகள் 90 நாட்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப் படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒரு சில வழக்குகள் 5 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இவற்றையெல்லாம் விரைவில் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. முதல்வர் பெண்கள் நலனுக் காக 30 சதவீதம் இட ஒதுக்கீடு, திருமண உதவி, மகப்பேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளார். இந்த அரசு பெண்களுக்கு பாதுகாப்பாக செயல் படும் அரசாக இருக்கிறது என கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக