சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ராமகிருஷ்ண டி.ஷெட்டியின் துளுமொழி ஆராய்ச்சியை பாராட்டி கர்நாடக அரசு விருது வழங்கி கெüரவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற விழாவில் கர்நாடக மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தலைமையில் கர்நாடக மாநில கல்வி அமைச்சர் ஸ்ரீவிஸ்வேஸ்வரா ஹெக்டே காகேரி விருதை வழங்கினார். ராமகிருஷ்ண டி.ஷெட்டி அண்ணாமலைப் பல்கலையில் 30 ஆண்டுகள் பணியாற்றி, பல்கலைக்கழகத்தின் உதவியுடன் துளு மொழியைப் பற்றி ஆய்வு செய்து வந்தார். துளுமொழியின் அமைப்பு, வரலாறு, சிறப்பு, தமிழ் மொழியோடு தொடர்பு போன்ற பல அம்சங்களில் அவரது அராய்ச்சி வெற்றிபெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக