பி.இ. படிப்புகளில் 2010-11-ம் ஆண்டில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களில் 29 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 22 மாணவர்கள், 7 மாணவிகள் அடங்குவர். பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.67 லட்சம் மாணவர்களில் தகுதிபெற்ற 1.62 லட்சம் மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
உயர்கல்வி முதன்மை செயலர் க. கணேசன், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ், இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1,67,406 மாணவர்களில் 4,900 பேரின் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. சான்றிதழ்கள் இணைக்கப்படாதது, தவறான தகவல் அளித்தது உள்ளிட்ட காரணங்களால் அவை தகுதி நீக்கம் செய்யப்பட்டன. அதன்படி, பொதுப்பிரிவில் 1,56,700 மாணவர்கள், தொழிற்பிரிவில் 5,806 மாணவர்கள் என மொத்தம் 1,62,506 மாணவர்கள் தகுதி பெற்றுளள்ளனர். பொதுப் பிரிவு மாணவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 13,075 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76,471, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த 7,449, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த 37,959, தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) வகுப்பைச் சேர்ந்த 19,173, தாழ்த்தப்பட்ட அருந்ததி (எஸ்.சி.ஏ.) வகுப்பைச் சேர்ந்த 2,066, பழங்குடியினர் (எஸ்.டி.) வகுப்பைச் சேர்ந்த 507 மாணவர்களும் அடங்குவர்.29 பேர் 200-க்கு 200: பொதுப் பிரிவு மாணவர்களில் 29 மாணவர்கள் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 7 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 3 மாணவர்கள் என மொத்தம் 10 பேர் கணிதம், இயற்பியல், வேதியியல், 4-வது விருப்பப் பாடம் (உயிரியல், கணினி அறிவியல் என ஏதேனும் ஒரு பாடம்) ஆகிய 4 பாடங்களிலும் தலா 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதனால் இவர்கள் பி.இ. ரேங்க் பட்டியலில் முதல் 10 சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.
மீதியுள்ள 19 மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களில் மட்டுமே 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். முதல் 10 சிறப்பிடங்களைப் பெற்றவர்கள்: திருப்பூர் எஸ். நந்தகுமார், ஈரோடு பி. அபிநயா, சேலம் பி. சரவணன், தூத்துக்குடி ஆர். பாண்டியன், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த ஜி.ஆர். கெüதம், திருப்பூர் ஆர். சதீஷ்குமார், ஈரோடு செல்வமலை முத்துக்குமரன், வேலூர் மாவட்டம், பணப்பாக்கத்தைச் சேர்ந்த எஸ். விஷ்ணுபிரியா, சென்னை எம். தினேஷ், திருவண்ணாமலை போளூரைச் சேர்ந்த ஆர். விக்னேஸ்வரன் ஆகிய 10 பேர் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை பெற்றிருந்ததால் அவர்களின் பிறந்த தேதியை வைத்து ரேங்க் தரப்பட்டுள்ளது.
மீதியுள்ள 19 பேரின் விவரம்:
எச். அசாருதீன், ஆர். பிரசன்னா, ஆர். நாகலட்சுமி, ஆர். அரவிந்த், எம். சுப்புராம், பி. ஹிதேஷ்குமார், எஸ்.எஸ். நிவேதா, எஸ். கமலக்கண்ணன், எஸ். ஸ்ரீநிவாசன், எஸ். அஜய்அரவிந்த், எஸ். ஸ்ரீராமன், ஜி. அரவிந்த் பழனியப்பன், கே. எஸ். ஜனனி, எம்.எஸ். நவீன் குமார், வி. வெங்கடேஷ், ஆர். கிருத்திகா, எஸ்.பி. சந்தியா, கே. விக்னேஷ், ஆர். மணி சுந்தரம். எஸ்.சி. பிரிவில் தருமபுரி சி.எஸ். நவீன் 199.75 மதிப்பெண் பெற்று முதலிடமும், எஸ்.சி.ஏ. பிரிவில் திருவண்ணாமலை, தண்டாரம்பட்டைச் சேர்ந்த எம். ராதாகிருஷ்ணன் 199.25 மதிப்பெண் பெற்று முதல் இடமும், எஸ்.டி. பிரிவில் சென்னை, அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த பி. லீலாப்ரீத்தி 195.25 மதிப்பெண் பெற்று முதலிடமும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 38,106 பேர் அதிகம்: பி.இ. படிப்பில் 2010-11-ம் ஆண்டில் பொதுப் பிரிவில் சேருவதற்கு தகுதி பெற்ற மாணவர்கள் கடந்த ஆண்டைவிட அதிகமாக 38,106 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு பொதுப் பிரிவில் 1,18,594 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக