உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

நடராஜர் கோயிலில் தரிசனத்தை பகல் 2 மணிக்குள் முடிக்க திட்டம்

சிதம்பரம்:

                பொதுமக்கள் வசதிக்காக சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகிற ஜூன் 19-ம் தேதி நடைபெறவுள்ள ஆனித்திருமஞ்சன தரிசனத்தை 12 மணி முதல் 2 மணிக்குள் முடிப்பது என பொது தீட்சிதர்கள் ஒப்புதலோடு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன திருவிழா பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் அ.ராமராஜூ தலைமை வகித்தார். அறநிலையத் துறை செயல் அலுவலர் க.சிவக்குமார் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது: 

                 தரிசனத்தை பகல் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் முடிப்பது. டாஸ்மாக் மதுபானக்கடை மற்றும் அசைவக் கடையை மூடக்கோருவது, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் வைப்பது, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது, தேர் மற்றும் தரிசனம் அன்று போக்குவரத்து மாற்றம் செய்வது, பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை செய்வது.கூட்டத்தில் பொதுதீட்சிர்களின் செயலாளர் ரா.சி.வைத்தியலிங்க தீட்சிதர், தனி வட்டாட்சியர் (கோவில்) கிருஷ்ணமூர்த்தி, அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஆர்.கே.நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் அறிவானந்தம், சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், தீயணைப்பு நிலைய அதிகாரி முகமதுசாதிக்அலி, நெடுஞ்சாலைத்துறை சீனுவாசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், இந்து ஆலய பாதுகாப்பு குழுத் தலைவர் குஞ்சிதபாதம், பக்தர் பேரவை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior