நெல்லிக்குப்பம்:
ஒன்றிய சேர்மன் வீட்டின் அருகிலேயே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது. அண்ணாகிராமம் ஒன்றியம் சித்தரசூர் ஊராட்சி காலனியில் ராஜிவ்காந்தி குடிநீர் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அண்ணாகிராமம் ஒன்றிய சேர்மன் கவுரி வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதன் அருகிலேயே சின்டெக்ஸ் டேங்க் வைக்க இடமில்லாததால் எதிர்புறத்தில் டேங்க் வைத்தனர். சாலையின் குறுக்கே சென்ற பைப் வாகனங்கள் சென்றதால் ஆறு மாதங்களுக்கு முன் உடைந்தது. அப் போது முதல் டேங்க்கில் தண்ணீர் ஏற்றப்படாமல் மோட்டார் அருகிலேயே தண்ணீர் பாழாகி வழிந்தோடுகிறது. அதனால் அப்பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தியுள்ளது. கிராமசபை கூட்டங்களில் இதுபற்றி புகார் தெரிவிக்கையில், உடனடியாக சீர் செய்யப்படும் என அதிகாரிகள் கூறியும் பயனில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக