உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

பராமரிப்பின்றி தடுப்பணை நீர் தேக்க முடியாத அவலம்

நெல்லிக்குப்பம்: 

                   வானமாதேவி கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் ஷட்டர்கள் பழுதாகி பராமரிப்பின்றி உள்ளதால் தண்ணீர் தேக்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் வானமாதேவியில் கெடிலம் ஆற் றின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் தண்ணீர் தேங்கியதால் சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் தடுப்பணையை பொதுப்பணித் துறையினர் பராமரிப்பதை மறந்தனர். தற்போதைய தடுப்பணைகள் போல் இல்லாமல் வானமாதேவி தடுப்பணை கருங்கல்லால் முறையாக கட்டப்பட்டதால் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் நன்றாக உள்ளது. பராமரிப்பு இல்லாததால் இரும்பு ஷட்டர்கள் பாழாயின. ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் ஷட்டர்கள் இல்லாததால் தேங்கி நிற்காமல் கடலில் கலந்து வீணாகிறது. தடுப்பணை அருகே தண்ணீர் தேங்க வழியில்லாமல் மணல் மேடானது. வானமாதேவி, திருவந்திபுரம் போன்ற பகுதிகளில் உள்ள தடுப்பணைகளை அதிகாரிகள் முறையாக பராமரித்தால் நிலத்தடி நீர் உயரும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior