சிதம்பரம்:
கடந்த காலத்தில் கற்பித்தல் திறனில் சில ஆசிரியர்களே புகழ்பெற்றவர்களாக திகழ முடிந்தது. 21-ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப உதவியோடு ஒவ்வொரு ஆசிரியரும் சிறந்த மற்றும் புகழ்பெற்ற ஆசிரியர்களாக முடியும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் கல்வியியல் துறை சார்பில் ""கல்வி நுட்பவியல் சாத்தியப்படுத்தும் கற்பித்தல்'' என்னும் தலைப்பிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்துப் பேசியது:
தொழில்துறை மற்றும் வியாபாரத்துறை வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. தொலை தொடர்பு மருத்துவம், தொழில்நுட்ப உதவியுடன் சிறப்புடன் செயல்படுகிறது. கற்பித்தல் செயல் முறையில் தொழில்நுட்பத்தை புறக்கணித்துவிட முடியாது. இந்த தகவல் தொடர்பு உலகத்தில் ஆசிரியர்களின் பணி மாறிக்கொண்டே வருகிறது. இணையதளம் மற்றும் மின்னணு வளங்கள் மூலம் தேவையான தகவல்களை பெறுவதற்கு தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு அவசியமாகிறது என எம்.ராமநாதன் தெரிவித்தார். கருத்தரங்குக்கு கல்வியியல் புல முதல்வர் எஸ்.மங்கையர்கரசி தலைமை வகித்தார். கல்வியியல் துறைத் தலைவர் கே.விஸ்வநாதன் வரவேற்ரார். இணைப் பேராசிரியர் ஆர்.ஞானதேவன் நன்றி கூறினார். கருத்தரங்கு அமைப்புச் செயலர் முனைவர் ஆர்.பாபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக