கடலூர்:
கடலூர் நகர பாதாள சாக்கடைத் திட்டத்தில் முதுநகர் சாலையில் பணிகள் துவங்க தேசிய நெடுஞ்சாலை அனுமதி வழங்காததால் காலதாமதமாகி வருகிறது. கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்ட பணி 40 கோடி மதிப்பில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை முடிக்கப்படவில்லை. நகரப் பகுதியில் தோண்டிய பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நகரமெங்கும் சகதியாக மாறி விட்டது. கோடை காலத்தில் துரி தமாக நடக்க வேண்டிய பணிகள் யாவும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை பணிக்காக டெண்டர் விட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட் டதால் தற்போது கட்டுமானப் பொருட் கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே ஏற்கனவே டெண்டர் எடுத் தவர்கள் திட்டத்தை முடிக்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் திட்டப்பணி தொடர்ந்து தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் முதுநகரில் இருந்து மஞ்சக்குப்பம் வரை தேசிய நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. பள்ளம் தோண்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையில் அனுமதி கேட்டு குடிநீர் வடிகால் வாரியம் காத்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகம் டில்லியில் இருப்பதால் அனுமதி கிடைப்பதில் தாமதமாகிறது. மழைக்காலம் வருவதற்குள் பாதாள சாக்கடைத் திட்டத்தின் முக்கிய பணிகள் ஓரளவாவது முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக