உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

வேளாண்மை பல்கலை.யில் கவுன்சலிங் துவக்கம்

                  கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் புதன்கிழமை துவங்கியது. முதல் நாளிலேயே பல்வேறு வேளாண் பாடப் பிரிவுகளில் 170 மாணவ மாணவியர் சேர்ந்துள்ளனர்.இளநிலை அறிவியல் பிரிவில் பி.எஸ்சி வேளாண் அறிவியல், தோட்டக் கலை, வனவியல், மனையியல் ஆகிய படிப்புகளும், இளநிலை தொழில்நுட்பப் பிரிவில் வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்தல் பொறியியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. வேளாண் பல்கலை.யில் சேர்வதற்காக 7,181 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1,561 பேர் கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட கவுன்சலிங்கை பல்கலை. பதிவாளர் சுப்பையன் துவங்கி வைத்தார். கவுன்சலிங்குக்கான கட்-ஆப் மதிப்பெண் காலையில் 198.25 இருந்து 189.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், 154 மாணவ மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் 77 பேர் பல்கலை.யில் சேர்க்கப்பட்டுள்ளனர். கவுன்சலிங்குக்கு மதியம் மொத்தமாக 161 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 93 பேர் பல்கலை.யில் சேர்ந்துள்ளனர்.

பாடப் பிரிவு வாரியாக மாணவர் சேர்க்கை விவரம்: 

              பி.எஸ்.சி வேளாண் அறிவியல் - 82 பேர், 
             வனவியல் - 2 பேர், 
             பி.டெக் வேளாண் பொறியியல் - 5 , 
            உயிரி தொழில்நுட்பம் - 35, 
            தோட்டக் கலை - 2, 
           உணவு பதப்படுத்துதல் பொறியியல் - 15,
           க்தி மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல் - 23, 
           உயிரி தகவல் தொழில்நுட்பவியல் - 4, 
          வேளாண் தகவல் தொழில்நுட்பம் - 2.
       
            கவுன்சலிங்கில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், உண்மைச் சான்றிதழ்களை வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கவுன்சலிங்கை துவக்கி வைத்து, பல்கலை. பதிவாளர் சுப்பையன் கூறியது:

                வேளாண் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேளாண் படிப்புகளில் சேர ஏறத்தாழ 6 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. ஆனால், இந்த ஆண்டு 7,181 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் 493 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சலிங்குக்கு மொத்தம் 1,561 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். வரும் 20-ம் தேதி வரை கவுன்சலிங் நடைபெற உள்ளது. ஜூலை 22-ம் தேதி பல்கலை. திறக்கப்படும், என்றார். பல்கலை.யில் வியாழக்கிழமை காலை நடைபெறும் கவுன்சலிங்குக்கு கட்-ஆப் மதிப்பெண் 185.25 முதல் 182.50 ஆகவும், மதியம் நடக்கும் கவுன்சலிங்குக்கு கட்-ஆப் 182.25 முதல் 179.75 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior