கடலூர்:
கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க் கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் பெரியார் கலைக் கல்லுரியில் 2010-2011ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு இன்றும், நாளை 18ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 21 மற்றும் 22ம் தேதி நடக்கிறது.
இன்று காலை துவங்கும் முதல் கட்ட கலந்தாய்வில் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், விலங்கியல், தாவரவியல் பாடங்களுக்கும், நாளை 18ம் தேதி பி.காம்.,- பி.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இயக்கியம், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கும் நடக்கிறது. பிளஸ் 2 பொது பாடப்பிரிவில் பகுதி மூன்றில் 800க்கு 500 மதிப் பெண்களுக்கு மேல் பெற்றவர்களும், தமிழ், ஆங்கில இலக்கியம் பாடப் பிரிவிற்கு மொழிப் பாடத்தில் 200க்கு 120 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இக்கலந் தாய்வில் பங்கேற்கலாம். இதற்கான அழைப்பு கடிதம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட பாடத்திற்கு விண்ணபித்து கடிதம் கிடைக்காதவர்கள் கலந் தாய்வு நடக்கும் நாட்களில் காலை 9 மணிக்கு கல்லூரி முதல்வரை சந்திக்க வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், டி.சி., ஜாதி மற்றும் நன்னடத்தைச் சான்றிதழ், சேர்க்கைக்கான கட்டணம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.
இரண்டாம் கட்ட கலந் தாய்வு 21ம் தேதி பி.எஸ். சி., பாட பிரிவிற் கும், 22ம் தேதி பி.காம்.,- பி.ஏ., பாட பரிவிற்கு நடக்கிறது. இதற்கு பொது பிரிவு பகுதி மூன்றில் 800க்கு 500க்கு மதிப் பெண்களுக்கு கீழ் பெற்றவர்களும் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவிற்கு மொழி பாடத்தில் 200க்கு 120 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக