உளுந்தூர்பேட்டை :
உளுந்தூர்பேட்டை அருகே, காணாமல்போன அரசு பள்ளி ஆசிரியரின் உடல் 13 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்தவர் வெங்கடேசன்(45). விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த, பாதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மணிமேகலை கடந்த 4 ஆண்டுகளாக சென்னை புளியந்தோப்பில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி பள்ளிக்கு செல்வதாக சென்ற வெங்கடேசன் வீடு திரும்பவில்லை. பண்ருட்டி போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று காலை 10 மணியளவில், பாதூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் ராமசாமி என்பவரது மரவள்ளி வயலில் துர்நாற்றம் வீசியது. காவலாளி கணேசன் பார்த்தபோது, அழுகிய நிலையில் எலும்புகூடாக ஆண் உடல் கிடந்தது. தகவலறிந்த வி.ஏ.ஓ., ஜெயக்குமார் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். காணாமல்போன ஆசிரியர் வெங்கடேசனின் உறவினர் முகிலன் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடந்தது ஆசிரியர் வெங்கடேசன் என உறுதி செய்தார். திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆசிரியர் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என, விசாரித்து வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக