பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனித உரிமை கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரங்கிப்பேட்டை நகர மனித உரிமைகள் கழக கூட்டம் நடந்தது. நகர அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் செல் வராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள டாஸ் மாக் கடையால் பொதுமக்கள், பஸ்பயணிகள் பாதிக்கப்பட்டு வருவதால் அரசு உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும், சின்னக்கடையில் 50 ஆண்டுகளாக இருந்து வந்த துணை அஞ்சல் அலுவலகத்தை முன் அறிவிப்பு இல்லாமல் காலிசெய்ததை கண்டித்தும். பரங்கிப்பேட்டை வழிதடம் வாங்கிக்கொண்டு பரங்கிப்பேட்டைக்கு வராமல் கொத்தட்டை வழியாக செல்லும் தனியார் பஸ்கள் மீது மோட்டார் வாகன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மனித உரிமை கழக நிர்வாகிகள் குமார், முத்துக்குமரன், செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக