உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

எல்லோரும் உழைத்தால்தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் : அமைச்சர் பன்னீர்செல்வம்பேச்சு

குறிஞ்சிப்பாடி: 

                   அரசின் நலத்திட்டங்கள் உள்ளது என இருமாப்புடன் இருந்து விடாமல் எல்லோரும் சேர்ந்து உழைத்தால் தான் மீண் டும் ஆட்சியை பிடிக்க முடியும் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

                       கடலூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கணேசன் முன் னிலை வகித்தார். பொருளாளர் பாஸ்கரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபால், ஜெயராமன், ராசவன்னியன், பூவராகசாமி எம். எல்.ஏ., அய்யப்பன், ஒன் றிய செயலாளர்கள் முத்துசாமி, சிவக்குமார், ஞானமுத்து, வெங்கட்ராமன், ராமு, ஜெயராமன், பண்ருட்டி சேர்மன் பச்சையப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கோவையில் உலகத்தமிழ் செம் மொழி மாநாட்டினை நடத்தும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பது. அவரது 87வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நலத் திட் டங்களை எடுத்துச் செல் லும் வகையில் தெருமுனை பிரசாரம் நடத்துவது. உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டுக்கு பெருந்திரளாக கலந்து கொள்வது என்பது உட் பட பல தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: 

                     தேர்தல் வரும் இந்த நேரத்தில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தற்போது, அ.தி.மு.க., எதற்கெடுத்தாலும் போராட்டங் களை நடத்தி வருகிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்க்கு முதல்வர் கருணாநிதி தொண்டர்களை அழைத்துள்ளார். அதனை செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை. கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். யாராக இருந்தாலும் உழைக்கிறவர்களுக்கு கட்சியில் பதவி கிடைக்கும். அரசின் நலத்திட்டங்கள் உள்ளது என இருமாப்புடன் இருந்து விடாமல் எல்லோரும் சேர்ந்து உழைத்தால் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். கட்சியில் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்றி முதல்வர் கருணாநிதியின் கரத்தையும், கட்சியையும் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior