சிதம்பரம்:
உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மற்றும் மாணவரணி சார்பில் சிதம்பரம் விளங்கியம்மன்கோயில் தெருவில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கடலூர் மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மீனவரணி செயலர் கே.கே.கலைமணி தலைமை வகிக்கிறார். மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலர் மு.செந்தில்அதிபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் டி.மணிவாசகம் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார். செல்வி ராமஜெயம் எம்எல்ஏ வரவேற்கிறார். நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர் நன்றி கூறுகிறார். வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலர் ஜி.சந்திரசேகரன், மாணவரணிப் பிரிவு மாவட்டச் செயலர் எம்.உமாமகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என ஏ.அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக