கடலூர்:
கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று, கடலூர் மாவட்ட தி.மு.க. செயலரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்து உள்ளார். கடலூர் திமுகவினர் கோவையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர் தெரிவித்து உள்ளார்.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, 23 முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது.உலகே வியக்கும் வண்ணம் உவகையுடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழ் மொழிக்கு உலகம் முழுவதும் பெருமை சேர்த்திட செம்மொழிக் காவலர் முதல்வர் கருணாநிதி தலைமையில் உலகத் தமிழ் அறிஞர்கள் கோவையில் ஒன்று கூடுகிறார்கள். மாநாட்டில் கடலூர் மாவட்டத் தி.மு.க.வினர் 23-ம் தேதி காலை 9 மணிக்கு அனைவரும் வந்து பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். கடலூர் மாவட்டத் தி.மு.க.வினர் தங்குவதற்கு கோவையில் திருச்சி சாலை சூலூரில் உள்ள ஜி.எஸ்.என். திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே கடலூர் மாவட்டத் தி.மு.க.வினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு 23-ம் தேதி காலை 8 மணிக்கு, அனைவரும் ஒன்று கூட வேண்டும். கடலூர் மாவட்டத் தி.மு.க.வினர் திருச்சி, கரூர், காங்கேயம், வெள்ளக்கோயில் பல்லடம் வழியாக சூலூர் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை வழியாக நீலாம்பூர் பீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, மாநாடு நடைபெறும் இடத்துக்கு வரவேண்டும்.திமுகவினர் அனைவரும் பொதுமக்களும் பெருந்திரளாக மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக