உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

கடலூர் மாவட்டத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்: 100 பேர்க்கு அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை

சிதம்பரம்:
 
          சிதம்பரம் கோயில் நகர அரிமா சங்கம், மாவட்டப் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி அரிவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்து கனவு சிறகுகள் மையம் சார்பில் சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

           முகாமில் இந்து கனவு சிறகுகள் மையத் தலைவர் டாக்டர் எத்திராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் 350 பேர், கண் பரிசோதனை செய்து கொண்டனர்.100 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் அரிமா கே.சேதுமாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் கே.கோவிந்தராஜ், செயலர் ஆர்.தீபக், பொருளர் டி.கே.விஜய்காந்த் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

விருத்தாசலம்: 

             விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.விருத்தாசலம் அரிமா சங்கம், ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி, கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியன இணைந்து  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை கூட்டு மாவட்டத் தலைவர் ரத்தினசபாபதி தொடங்கி வைத்தார். விருத்தாசலம் லயன்ஸ் சங்கத் தலைவர் துரைராஜ் தலைமை ஏற்றார். மாவட்டத் தலைவர் அகர்சந்த் முன்னிலை வகித்தார், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன் சிறப்புரை வழங்கினார். மண்டல தலைவர் ஞானமூர்த்தி, வட்டாரத் தலைவர் சோஹன்லால் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெய்வேலி: 

            நெய்வேலியை அடுத்த இருப்பு கிராமத்தில் மனிதநேய வளர்ச்சி மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.புதுச்சேரி கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமை, மனித நேய வளர்ச்சி மையத்தின் செயலர் ஜீவா முருகேசன் தொடக்கிவைத்தார். மாநிலத் துணைச் செயலர் அசோகன் தலைமை வகித்தார். புதுச்சேரி கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் செலினாஜோஷி, சிவகாயத்ரி மற்றும் ஜான்சன் ஆகியோர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior