உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

ரவுடியை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டம்:கடலூரில் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் 4 பேர் கைது

கடலூர்:

            கடலூர் கோர்ட்டுக்கு வரும் குற்றவாளியை கொலை செய்யத் திரிந்த நான்கு பேரை கடலூர் சிறப்புப் படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து துப் பாக்கி, வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

             கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வரும் கொலைக் குற்றவாளியை வெடிகுண்டு வீசி தாக்கி கொலை செய்யப்போவதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சிறப்புப் படை சப்- இன்ஸ்பெக்டர் அமீர் ஜான், ஏட்டுகள் நடராஜன், ரவி உள்ளிட்ட போலீசார் கடலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி மோட்டார் பைக்கில் வந்த நான்கு பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

                  அவர்கள், புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் வாசு என்கிற பழனிராஜ் (32), காஞ்சிபுரம் கணேசன் மகன் தேவ் என்கிற தேவராஜ் (24), கல்பாக்கம் முருகேசன் மகன் விஜி என்கிற விஜயக்குமார் (22) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கொழப்பலூரைச் சேர்ந்த சந்தானம் மகன் தாமு என்கிற தாமோதரன் (24) என தெரிய வந்தது.அவர்களை சோதனை செய்ததில் ஒரு நாட்டு கை துப்பாக்கி, நான்கு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் மூன்று வீச்சரிவாள்கள் இருந்தன. அவற்றை போலீ சார் கைப்பற்றினர்.

                 பின்னர் பிடிபட்ட நால்வரிடமும் தனித்தனியே முறையாக விசாரணை செய்ததில் தேவராஜ் மீது காஞ்சிபுரத்தில் மஞ்சு, குமரவேல் சகோதரர்களை கொலை செய்தது உள்ளிட்ட 4 கொலை மற்றும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்கு. தாமோதரன் மீது விஷ்ணு காஞ்சியில் இரட்டை கொலை, வழிப்பறி வழக்கு. விஜி மீது வழிப்பறி, கொள்ளை, திருட்டு கல்பாக்கத்தில் பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கு.

                  வாசு மீது புதுச்சேரி முத்தியால்போட்டை, வானூர், திருப்பாதிரிப்புலியூர், ஒரத் தூர் ஆகிய ஊர்களில் தண்டல் வட்டிக்கு விடும் நபர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கு மற்றும் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரிந்தது. மேலும், ரெட்டிச்சாவடி அருகே சுந்தரம் என்பவரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கின் விசாரணைக்காக நாளை 27 மற்றும் 28ம் தேதிகளில் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வரும் வெள்ள குணாவை கடலூரிலேயே வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது.

                இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்தனர்.சிறை நட்பால் தொடரும் கொலை :தமிழகத்தில் கொலை கொள்ளையில் ஈடுபடும் ரவுடிகள், சிறையில் ஏற்படும் நட்பை வைத்து வெளியே வந்ததும் மேலும் பல குற்றங்களில் ஈடுபடுகின்றனர். கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். 

                 இதில் தற்போது நாகை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுவது தொடர்பாக மயிலாடுதுறை அடுத்த ஆத்தூர் கண்ணையனின் பேரன் சுமன் தலைமையிலான ரவுடிகளுக்கும், புதுச்சேரி வெள்ள குணா தலைமையிலான ரவுடிகளுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதும் அதன் உச்சகட்டமாக தொடர் கொலைகளில் ஈடுபட்டும் வருகின்றனர். தற்போது பிடிபட்ட நால்வரும் சுமன் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior