உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

விருத்தாசலம் அருகே 185 மாணவ, மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்கள்

விருத்தாசலம்:

            விருத்தாசலம் அருகே நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் 6, 7 ,8ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

            விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மன்னம்பாடி கிராமம். இங்கு 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சுற்றியுள்ள சிறுமங்கலம், கோவிலூர், தொரவளூர் ஆகிய கிராமங்களில் உயர்நிலை பள்ளியும், பெரம்பலூர், விளாங்காட்டூர், சாத்தியம், டி.புடையூர் ஆகிய கிராமங்களில் நடுநிலை பள்ளிகளும் உள்ளது. இருந்தும் மன்னம்பாடி பள்ளி மட்டும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடக்க பள்ளியாகவே இருந்து வந்தது. கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருவத்தூர், எரப்பாவூர், நகர், வேப்பூர் ஆகிய பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட போது மன்னம்பாடி தொடக்க பள்ளியும் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

           தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தலைமையாசிரியர் நியமிக்கப்பட்டார். மொத்தம் அனைத்து வகுப்புகளையும் சேர்த்து 185 பேரும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை மட்டும் 64 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.தொடக்கப் பள்ளியாக இருந்தபோது பணியில் இருந்த இரண்டு ஆசிரியர்களே தற்போதும் நீடித்து வருகின்றனர். இதனால் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. 

               அவர்களும் கடமைக்கு பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.ஆசிரியர்கள் நியமிக்காதது மட்டுமில்லாமல் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவும் வழங்குவதில்லை. மன்னம்பாடி பள்ளியுடன் தரம் உயர்த்தப்பட்ட மற்ற பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மன்னம்பாடி பள்ளியில் மட்டும் தேவையான கட்டட வசதிகள் இருந்தும் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக் காதது புரியாத புதிராக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior