உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

கடலூரில் திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

கடலூர் : 

           நகை, பணம் திருடுவதற்காக ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் மிலிட்டரி "சரக்கை' குடித்ததால், போதை தலைக்கேறி போலீசில் சிக்கிக் கொண்ட சம்பவம் கடலூரில் நடந்தது. 

 இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விவரம் வருமாறு: 

             கடலூர் அடுத்த உச்சிமேடு கிராமத்தின் அருகே தியாகு நகரில் வசித்தவர் ரத்தினம்.ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சமீபத்தில் இறந்தார். இவரது மனைவி தனலட்சுமி. மகன் ரமேஷ் (42); சென்னையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவரது வீடு கூரை மற்றும் ஓடுகளால் இணைத்து கட்டப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி இரவு  வீட்டைப் பூட்டி விட்டு தாய் தனலட்சுமியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். நோட்டம் பார்த்த பாபு, செல்வகுமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை சைக்கிளில் திருடச் சென்றனர். கூரையை பிரித்து உள்ளே இறங்கி வீட்டுக்குள் இருந்த தாம்பாலத் தட்டு, மோதிரம், பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டனர்.

                அப்போது, மிலிட்டரி சரக்கு மூன்று பாட்டில் இருந்ததைப் பார்த்துள்ளனர். உடனே அங்கேயே பாட்டில்களைத் திறந்து பாபு முழு பாட்டில், கூட்டாளி செல்வகுமார் பாதி பாட்டில் என சரக்கை குடித்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு சைக்கிளையும் திருடிக் கொண்டு ஆளுக்கொரு சைக்கிளில் திருடிய பொருட்களை வைத்து கட்டிக் கொண்டு அவசர அவசரமாக புறப்பட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக போதை தலைக்கேற கடலூர் பீச் ரோடு வரை மட்டுமே அவர்களால் வர முடிந்தது. முழு பாட்டில் சரக்கையும் குடித்த பாபு சைக்கிளை போட்டு விட்டு சாலையோரத்திலேயே "மட்டை'யாகி விட, பாதி பாட்டில் சரக்கை குடித்து ஓரளவிற்கு நிதானமாக இருந்த செல்வகுமார் திருடிய பொருட்களுடன் சைக்கிளில் தப்பிச் சென்றார். மறுநாள் காலையில் ஊருக்கு வந்த ரமேஷ் வீட்டில் திருடு போனதைக் கண்டு அதிர்ந்தார். உடன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து உடனடியாக டெல்டா படை போலீசார் விரைந்து சென்று லோக்கல் திருடர்களை தேடினர். அப்போது பீச்ரோட்டில் போதை தலைக்கேறி மயக்கத்தில் படுத்திருந்த பாபுவையும் அவர் திருடி வந்த சைக்கிளையும் கைப்பற்றினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior